நீலகிரி தேயிலை எஸ்டேட்டில்: 13 காட்டு யானைகள் முகாம்

பந்தலூர்:நீலகிரி டேன்டீ பகுதியில் 13 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், சேரம்பாடி வனச்சரகம் டேன்டீ மற்றும் சேரங்கோடு பகுதியில் 13 காட்டு யானைகள் கடந்த சில நாட்களாக குட்டியுடன் தேயிலை எஸ்டேட்டில் முகாமிட்டுள்ளது. தேயிலை பறிக்க வந்த தொழிலாளர்கள், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் இதனால் அச்சம் அடைந்துள்ளனர். காட்டு யானைகளால் பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தடுக்க சேரம்பாடி வனச்சரக காப்பாளர் கிருபானந்தகுமார் மற்றும் யானை கண்காணிப்பு பணியாளர்கள்  இப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், யானைகளை கிளன்ராக் வனப்பகுதிக்கு அழைத்து துரத்தினர். தொடர்ந்து, பந்தலூர் சேரம்பாடி நெடுஞ்சாலை பகுதியை யானைகள் எந்த நேரத்திலும் கடந்து செல்லலாம் என்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்….

Related posts

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!