நீலகிரி, கோவை, ஈரோட்டை சேர்ந்த 596 பயனாளிகளுக்கு ரூ.2.64 கோடி நலத்திட்ட உதவிகள்

ஊட்டி : நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 596 பயனாளிகளுக்கு ரூ.2 ேகாடியே 64 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது. விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி வரவேற்றார். கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். நீலகிரி எம்பி ராசா, தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 596 பயனாளிகளுக்கு ரூ.2 ேகாடியே 64 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதைத்தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:தமிழகத்தில் பழங்குடியினர் மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட வருகிறது. வேலை வாய்ப்பு, கல்வி, தொழில் என அனைத்து துறைகளிலும் அவர்கள் முன்னேற்றம் அடைய வழி வகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 1138 பள்ளிகளும், பழங்குடியினர் நலத்துறை சார்பில் 320 பள்ளிகளும், 8 ஏகலைவா பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. இது தவிர மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட்டில் 85 சதவீதம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் கல்வி மேம்பாட்டிற்காகவும், கல்வி சார்ந்த திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது. மீதமுள்ள 15 சதவீதம் பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, தாட்கோ மூலம் வீடுகள், பள்ளிகள் கட்டுவதற்கும் மற்றும் தொழிற்சார்ந்த கடன் உதவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், திறன்சார்ந்த கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு என தனி ஆணையம் அமைத்துள்ளார். வன்கொடுமை தடுப்பு சட்டம் மூலம் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நிவாரணங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாதிச்சான்ழிதழ்கள் தற்போது எளிதாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது. தமிகத்தில் 19 மாவட்டங்களில் 36 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அதில், 6 வகையான பழங்குடியின மக்கள் அழியும் பட்டியலில் உள்ளனர். அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர்களின் குழந்தைகளுக்கு பள்ளி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பிஎச்டி படிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி படித்து முதல் நிலை தேர்வு முடித்தவர்கள் அடுத்தக்கட்ட தேர்விற்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள ரூ.50 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார். தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பேசுகையில்,“நீலகிரி மாவட்டத்தில் 496 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளன. இங்கு முதல் தவணை தடுப்பூசி முழுமையாக செலுத்தி தமிழகத்திலேயே முதல் தவணை ஊசி முழுமையாக செலுத்திய மாவட்டமாக நீலகிரி மாவட்டம் உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் துறை இணைந்து பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மக்களை தேடி மக்களின் அரசு திட்டம் மூலம் 20 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார். இக்கூட்டத்தில், நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள், பிரதிநிதிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பலர் கலந்துக் கொண்டனர்….

Related posts

மழை நீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள், படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உத்தரவு

மின்சார வாரிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24X7 மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு

கட்டடக் கழிவுகளை கொட்டுவதை கண்காணிக்க குழு அமைத்தது சென்னை மாநகராட்சி : வாகனங்கள் பறிமுதல்; ரூ.79,000 அபராதம் வசூல்