நீலகிரியில் இரு நாட்களாக கனமழை-நடுவட்டத்தில் 47 மி.மீ. பதிவு

ஊட்டி : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் மற்றும் குன்னூர் அருகே பர்லியார், கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. நேற்று பகல் 12 மணியளவில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு ஊட்டி நகரில் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக நகரில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல், ஊட்டி புறநகர் பகுதியிலும் மழை பெய்தது. மழை காரணமாக குளிர் நிலவியதால் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் (காலை 8 மணி நிலவரப்படி) பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): ஊட்டி 12.8, நடுவட்டம் 47, கிளன்மார்கன் 18, அவலாஞ்சி 20, எமரால்டு 12, குன்னூர் 13, பர்லியார் 23, கேத்தி 32, கூடலூர், பாடந்தொரை 26, ஒவேலி 22, தேவாலா 16 என ெமாத்தம் 446 மி.மீ. பதிவாகியுள்ளது….

Related posts

கர்நாடகாவில் இன்று ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

முதலமைச்சரை சந்தித்து அருந்ததியர் அமைப்பினர் நன்றி..!!

சென்னை வியாசர்பாடியில் ரூ.14.75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்..!!