நீர்மட்டம் உயர ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும் ஜான்சி ராணி, வேலுநாச்சியார், அவ்வையார் வேடமிட்டு தஞ்சாவூர் புத்தக திருவிழாவில் மாணவ, மாணவிகள் அசத்தல்

தஞ்சாவூர், ஜூலை 29: தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில் ஜான்சி ராணி, வேலுநாச்சியார், கண்ணகி, அவ்வையார், விவசாயி, அசோகர் வேடமிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் அசத்தினர். தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் தஞ்சாவூர் புத்தகத் திருவிழா தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தினமும் அறிவியல் அரங்கம், இலக்கிய அரங்கம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிந்தனை நகைச்சுவை அரங்கம் ஆகியவையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெறும் வகையில் சிறு கதைகள், இலக்கியம், வரலாறு, அரசியல், ஆன்மீகம், போட்டி தேர்வுகள், சமையல் குறிப்புகள், பள்ளி பாட நூல்கள் என லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ளன, பள்ளி மாணவ, மாணவிகளின் வாசிப்பையும், சேமிப்பையும் ஊக்கப்படுத்தும் வகையில் ரூபாய் 1,500க்கு மேல் புத்தகம் வாங்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் சார்பில் சிறப்புப் பரிசும் வழங்கப்படுகிறது.

கடந்த 19ம் தேதி துவங்கிய புத்தக கண்காட்சி திருவிழா இன்று வரை நடைபெறுகிறது. புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மாறுவேட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பள்ளி மாணவர்கள் வீரமங்கை வேலுநாச்சியார், ஜான்சிராணி, கண்ணகி, அவ்வையார், விவசாயி, சாம்ராட் அசோகர், பாரதியார், காமராஜர், முருக கடவுள், திருவள்ளுவர், பாரத மாதா, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகிய வேஷமிட்டு அவர்களது வீர வசனங்களை பேசி தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் முழு நேர ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து