நீர்நிலை சீரமைப்பு, கொரோனா கட்டமைப்புக்கு சென்னை மாநகராட்சிக்கு 2 விருதுகள்: அதிகாரிகள் தகவல்

சென்னை: நீர்நிலைகள் சீரமைப்பு, கொரோனா கட்டமைப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய நகரங்களில் சென்னை மாநகராட்சி இரண்டு விருதுகளை பெற்றுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் சிறந்து விளங்கும் நகரங்களுக்கு ஸ்மார்ட் சிட்டி விருதை ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை வழங்குகிறது. அதன்படி சென்னையில் 210 நீர்நிலைகளை அடையாளம் கண்டு மாநகராட்சி சீரமைத்தது. அதேபோன்று கொரோனா பரவ துவங்கிய 2020ம் ஆண்டில் கொரோனாவுக்கான கட்டமைப்புகள் மற்றும் புதிய யுக்திகளை சென்னை மாநகராட்சி கையாண்டு கட்டுப்படுத்தியது. இதற்காக ஸ்மார்ட் சிட்டி 2020ம் ஆண்டுக்கான இரண்டு விருதுக்கு சென்னை மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கான விருதை டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் இருந்து சென்னை மாநகராட்சி துணை ஆணையர் விஷு மகாஜன், சென்னை ஸ்மார்ட் சிட்டியின் தலைமை செயல் அலுவலர் ராஜ் செரூபல் ஆகியோர் பெற்றுக் கொண்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை