நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி

புதுக்கோட்டை,ஏப்.19: புதுக்கோட்டையில் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் பணியும் போது வீர மரணம் அடைந்த அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் நிலையத்தில் உள்ள நினைவு தூண்களில் நினைவஞ்சலி செலுத்தி அதன் தொடர்ச்சியாக கடந்த 14ம் தேதி முதல் வரும் 20ம் தேதி வரை நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் கூடுமிடம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

அது ஒரு பகுதியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட நீத்தார் நினைவு தின விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த மினி மாரத்தான் போட்டியானது மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி புதிய பேருந்து நிலையம் திலகர் திடல், பழனியப்பா, வழியாக தீயணைப்பு நிலையத்தை அடைந்தது.

அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு தீயணைப்பு நிலைய வளாகத்தில் தீ தடுப்பு முறை குறித்த ஒத்திகை அளிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த மினி மாரத்தான் போட்டியில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை