நீதிமன்ற தீர்ப்பின்படி ஊதியம் வழங்க கோரி குடிநீர் வாரிய ஓப்பந்த தொழிலாளர்கள் மனு

 

பெரம்பலூர்,அக்.17: நீதி மன்றத்தீர்ப்பின் அடிப் படையில் வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை வழங்கிடக்கோரி ஒப்பந் தந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் பணி புரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, செட்டில் ரேட் படி ஊதியம் வழங்க கோரியும், கடந்த நான்கு மாதங்களுக்கு உள்ளாக ஊதியம் வழங்கப்படாததை உடனடியாக வழங்கக் கோரியும், நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை வழங்கிடவும், அடையாள அட்டை, சீருடை, டார்ச் லைட் போன்ற உப கரணங்கள் வழங்கிடக் கோரியும் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளரிடம் கோரிக் கை மனு வழங்கப்பட்டது. இதில் சிஐடியூபெரம்பலூர் மாவட்ட செயலாளர் அகஸ்டின், மாவட்ட தலைவர் ரங்கநாதன், குடிநீர் வடிகால் வாரிய சங்க நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ராஜி, ஜெயராமன், பெரியசாமி, கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை