நீதிமன்ற உத்தரவுபடி திருச்சி ஸ்டேஷனில் கையெழுத்திட்டார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திருச்சி: திமுக பிரமுகரை தாக்கியது உள்பட 3 வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அவருக்கு, திருச்சியில் 2 வாரம் தங்கியிருந்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். திருச்சியில் இருந்து வந்த பின் வாரம்தோறும் திங்கள், புதன், ெவள்ளி கிழமைகளில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதித்து நீதிபதி ஜாமீன் வழங்கினார். இதையடுத்து அவர் கடந்த 12ம் தேதி புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் நேற்று இரவு ஜெயக்குமார் வந்தார். பின்னர் திருச்சியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். கோர்ட் உத்தரவின்படி ஜெயக்குமார் இன்று காலை 10.20 மணிக்கு கன்டோன்மென்ட் காவல் நிலையத்துக்கு சென்று கையெழுத்திட்டார். வெளியே வந்த பின்னர் அவர் கூறுகையில்,‘‘எங்கள் மீது பொய் வழக்குகள் போட்டு அழித்து விடலாம் என்று நினைத்தால் தவறு. அது பகல் கனவு காண்பது போலாகும். அந்த கனவு ஒரு போதும் பலிக்காது’’ என்றார்.அமமுக நிர்வாகி கோஷம்முன்னதாக, ஓட்டலில் இருந்து ஜெயக்குமார் காரில் வெளியே வந்ததும், அமமுக நிர்வாகி ஒத்தக்கடை செந்தில் என்பவர் கையில் அதிமுக கொடியை வைத்து கொண்டு ஜெயக்குமாரின் காரை மறித்து, ‘‘கட்சியின் நிரந்தர பொது செயலாளர் சின்னம்மா’’ என்று கோஷமிட்டார். அவரை போலீசார் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

பாஜகவின் ஊதுகுழலாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் செயல்படுகிறார்: மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சனம்

மீஞ்சூர் அருகே ரயில் சேவை பாதிப்பு..!!

தென்காசி: குற்றால அருவிகளில் குளிக்க தடை