நீதிமன்றத்தில் குண்டு வைத்த விஞ்ஞானி தற்கொலை முயற்சி

புதுடெல்லி: டெல்லியை சேர்ந்தவர் பாரத் பூஷன் கட்டாரியா (47). ராணுவத்துக்கு தேவையான  ஆயுதங்களை கண்டுபிடித்து சோதனைகள் நடத்தும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) விஞ்ஞானியாக உள்ளார். இவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும்  வழக்கறிஞர் தன் மீது தொடர்ந்து வழக்குகள் போட்டு வந்ததால் கடும்  கோபமடைந்தார். கடந்த 9ம் தேதி அவர் பணியாற்றும் நீதிமன்ற அறைக்குள் டிபன் பாக்ஸ் வெடிகுண்டை வைத்து, அவரை கொல்ல முயன்றார். இது தொடர்பான வழக்கில் இருதினங்களுக்கு முன்  கட்டாரியாவை போலீசார் கைது செய்தனர். போலீஸ் காவலில் இருந்த இவர், நேற்று தற்கொலைக்கு திடீரென முயன்றார். கழிவறையில் வைக்கப்பட்டிருந்த, கை கழுவுவதற்கான ரசாயன திரவத்தை (ஹாண்ட் வாஷர்) குடித்து விட்டார். அவரை போலீசார் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். தற்போது, அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்….

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை