நீண்ட நாட்களுக்கு பிறகு உயர்ந்த மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் 105 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 105 புள்ளிகள் உயர்ந்து 51,528.40 புள்ளிகளாக உள்ளது. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 105 புள்ளிகள் உயர்ந்து 51,528.40 புள்ளிகளாக உள்ளது.  இது நேற்றுடன் முடிவடைந்த வர்த்தகத்தில் 51,422.88 புள்ளிகளாக இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மதிப்பில், ஐ.டி.சி., ஏசியன் பெயிண்ட்ஸ், பாரதி ஏர்டெல் உள்ளிட்டவை லாப நோக்குடன் காணப்படுகின்றன.
 
இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 15,446.60 புள்ளிகளாக உள்ளது.  இதில், ஆட்டோ மொபைல் துறை மற்றும் வங்கிகள் துறை தலா ஒரு சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.  எனினும் மருந்து பிரிவு, உலோகங்கள் ஆகியவை லாப நோக்கில் காணப்படுகின்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு  தற்போது  முன்பை பங்கு சந்தை உயர்ந்துள்ளது.

Related posts

அக்-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.

தங்கம் விலை சவரன் ரூ.57ஆயிரத்தை நெருங்குகிறது

மீண்டும் ஏற தொடங்கிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,960க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி