நீண்ட சட்ட போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தது மகிழ்ச்சி!: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என கோகுல்ராஜின் தாயார் கண்ணீர்மல்க நம்பிக்கை..!!

மதுரை: பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின்னர் நீதி கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது தாயார் சித்ரா தெரிவித்துள்ளார். கோகுல்ராஜ் ஆணவ கொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை கிடைக்க வேண்டும் என்று வழக்கை நடத்தி வந்ததாக அவர் கூறியுள்ளார். கொலை வழக்கில் நீண்ட சட்ட போராட்டம் நடத்தி நீதி கிடைக்க காரணமாக இருந்த வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் பட்டதாரியான தமது மற்றொரு மகனுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தமிழ்நாடு அரசு அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சித்ரா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என்று மதுரை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்திருக்கிறது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோதே 2 பேர் உயிரிழந்தனர். மேலும் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5 பேரை விடுவித்து நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்தார். வேறுசாதி பெண்ணை திருமணம் செய்ததால் ஆணவ படுகொலை செய்யப்பட்டு, பள்ளிபாளையம் அருகே தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் உடல் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது….

Related posts

ரேஷனில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான துவரம் பருப்பு, பாமாயில் அனைவருக்கும் விநியோகம்: எடப்பாடிக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ம் தேதி திருவள்ளூரில் தொடங்கி வைக்கிறார்: பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

காலை உணவு திட்டம், நான் முதல்வன் உள்ளிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டங்களை பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு மாபெரும் வெற்றிகண்டுள்ளது: தமிழ்நாடு அரசு பெருமிதம்