நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்

புதுடெல்லி: கொரோனா 2வது அலையால் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், தொற்று குறைந்து வருவதால் வரும் 12ம் தேதி தேர்வு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், வரும் 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நேற்று டிவிட்டர் பதிவில், `மாணவர்கள் விவகாரத்தில் அவர்கள் படும் கஷ்டங்கள், துயரங்களை கண்டு கொள்ளாமல் ஒன்றிய அரசு கண்மூடித்தனமாக இருக்கிறது. நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும். அவர்களுக்கு நியாயமான வாய்ப்பு வழங்க வேண்டும்,’ எனக் கூறியுள்ளார்….

Related posts

தூத்துக்குடி அதிகாரிகள் சொத்து விவரங்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி

சக்கரவியூக பேச்சு பிடிக்காததால் எனக்கு எதிராக ஈடி ரெய்டு நடத்த திட்டம்: டீ, பிஸ்கட்டுடன் காத்திருப்பதாக ராகுல் டிவிட்

தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற முடியவில்லை ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியால் ஆந்திராவில் கஜானா காலி: முதல்வர் சந்திரபாபு நாயுடு வேதனை