நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

 

அன்னூர், ஜூன் 25: அன்னூரில் தபெதிக சார்பில் நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவ பட்டப்படிப்பு முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு ஒன்றிய அரசு நடத்தும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்றும், நீட் தேர்வை அமல்படுத்த வரும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் அன்னூர் தாலுகா தபெதிக சார்பில் அன்னூர் பயனீர் மாளிகை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலுன், ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. கல்வித் துறையின் உரிமைகளை மாநில அரசின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், தபெதிக மாவட்ட செயலாளர் சந்திரசேகர், அன்னூர் ஒன்றிய தலைவர் ராமன், பழனிச்சாமி, துரைசாமி, சண்முகநாதன் மற்றும் நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். முடிவில் நீட் வாசகம் அடங்கிய காகிதத்தை கிழித்து சேதப்படுத்தி கண்டனம் தெரிவித்தனர். அதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு