நீட் தேர்வில் மாணவர்கள் தொடர் சாதனை

அரூர், ஜூன் 6: தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே எச்.தொட்டம்பட்டியில் உள்ள ஜெயம் வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில், 2023-24ல் நடந்த நீட் தேர்வில் மாணவன் மோனிஷ் கிரிதரன் 610 / 720 மதிப்பெண் பெற்றுப் பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் இம்மாணவன் 2023-24 கல்வி ஆண்டில் பிளஸ் 2ல் படித்தவர். மேலும் பூமிகா – 583, தானேஷ்வரி – 557, நந்திதா- 555, கவிநிஷா – 541 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியில் இதுவரை பயின்ற 140க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

மேலும் 2023-24 கல்வி ஆண்டில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவி சமநெறி 591 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 2ம் இடமும், பிளஸ் 1ல் தியா 595 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 2ம் இடமும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சந்தியா 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடமும் பெற்றுள்ளனர். மேலும் 2023-24 நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தலைவர் ரத்தினம், பொருளாளர் பன்னீர்செல்வம், மேலாளர் கிருஷ்ணன், பள்ளியின் இயக்குநர் தமிழ்வாணன், பள்ளியின் நிர்வாக இயக்குநர்கள், பள்ளியின் முதல்வர் சிலம்பரசன் மற்றும் இருபால் ஆசிரியர்களும், மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுகள் வழங்கினர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை