நீட் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற ஸ்ரீவெங்கடேஷ்வரா பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு முன்னாள் அமைச்சர் பரிசு வழங்கினார்

 

கோபி,ஜூன்17: நீட் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற கோபி அருகே ஒத்தகுதிரையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவியரை முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பாராட்டி பரிசு வழங்கினார். இந்த ஆண்டிற்கான நீட் தேர்வில் கோபி அருகே ஒத்தக்குதிரையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சீனியர் செகண்டரி பள்ளி மாணவி லக்ஷிதா 640 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் வகித்தார்.மாணவர் மிதுன் சக்கரவர்த்தி 571 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவி துஷாரா 541 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும், மாணவி சபரிகா 509 மதிப்பெண்களுடன் நான்காம் இடம் பிடித்தார்.

2023ம் ஆண்டு சி.பி.எஸ்.இ. தேர்வில் சாதனை படைத்த தாணவ, மாணவியரே, நீட் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த கல்வியாண்டில் 12ம் வகுப்பு படித்து அதன் தொடர்ச்சியாக நீட் தேர்வு எழுதி முதல் முயற்சியிலேயே சிறந்த மதிப்பெண் மருத்துவ கல்லூரியில் இடம் பெற்று உள்ள மாணவ மாணவிகளை முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், பள்ளியில் பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் கெட்டிமுத்து,இயக்குனர்கள் செங்கோட்டையன், ஜோதிலிங்கம் மோகன் குமார் மற்றும் பள்ளி முதல்வர் ராஜேஷ் ஆகியோரும் பாராட்டினர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி