நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 71 பேர் தேர்ச்சி

ராமநாதபுரம், ஜூன் 21: ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு அரசு பள்ளிகளில் இருந்து நீட்தேர்வு எழுதிய 178 மாணவ,மாணவிகளில் 71 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 71 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து இந்தாண்டு 178 மாணவ,மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். நீட் தேர்வில் இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 39.88 ஆகும். இதில் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சீனிவாசன் 720-க்கு 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், ஆர்.காவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சர்மிலி 414 மதிப்பெண்கள் பெற்றும் 2ம் இடத்தையும், ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் செந்தாமரைக்கண்ணன் 411 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும், காடர்ந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி திலகசர்மி 363 மதிப்பெண்கள் பெற்று 4-ம் இடமும் பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் முதல் 13-ம் இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் ஏற்கனவே பிளஸ் 2 தேர்வை முடித்து, நீட் தேர்வுக்காக சிறப்பு பயிற்சி இந்தாண்டு தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து கூறும்போது, கடந்தாண்டு அரசு மேல்நிலை பள்ளிகளில் இருந்து 278 மாணவ,மாணவிகள் நீட் தேர்வு எழுதி 90 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் இந்தாண்டு தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட குறைவாக இருந்தாலும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை