நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி துவங்கியது

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணி தொடங்கியது. இதனால் நிலத்தை சீரமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் விவசாயிகள் மின் மோட்டாரை கொண்டு நிலத்தடி நீரில் 3 போகம் கோடை, குறுவை, தாளடி என சாகுபடி (விவசாயம்) பணியை செய்து வருகின்றனர். சில இடங்களில் மின் மோட்டார் இல்லாத விவசாயிகள் மேட்டூரிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரையே நம்பி ஒரு போகம் மட்டும் சம்பா சாகுபடியை தொடங்கியுள்ளனர்.கடந்தாண்டு முன் கூட்டியே தென் மேற்கு பருவமழை பெய்ததால் கர்நாடகா அணைகள் நிரம்பி அதிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது.

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் விரையமாக கடலுக்கு சென்றது.கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் அதிகமாக இருந்ததால், 3 முறை அணை நிரம்பியது இதனால் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே மே மாதம் 24ம் தேதி குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார். மே மாதம்24ம் தேதி விவசாயத்திற்கு தண்ணீர் திறந்தது வரலாற்று சாதனை என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து சாகுபடி செய்தனர். இந்நிலையில், இந்தாண்டு மின் மோட்டாரில் நிலத்தடி நீரை கொண்டு சுமார் 16, 500 ஏக்கரில் விவசாயிகள் கோடை சாகுபடி பணியை தொடங்கி அறுவடை செய்து பிறகு, 34 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடியை தொடங்கி அந்த பணியில் தற்போது நெல் மணிகள் அறுவடைக்கு தயாராகவும், சில இடங்களில் கதிர்கள் வந்துக் கொண்டிருக்கிறது. தாமதமாக தொடங்கிய விவசாயம் தற்போது பயிராக வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஆற்றுநீர் மற்றும் நிலத்தடி நீரை கொண்டு நீடாமங்கலம் வேளாண் கோட்டப் பகுதிகளான ஆதனூர், காணூர், பருத்திக்கோட்டை, மேலாளவந்தச்சேரி, அரிச்சபுரம், தேவங்குடி, சித்தாம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா நடவு பணிக்கு நாற்றங்கால் தயார் செய்து விதை விடும் பணிகளும், முன் கூட்டியே விதை விட்ட ஆடுதுறை 51 போன்ற ரகங்கள் நடுவதற்கு வயல்களை மண்வெட்டியை கொண்டு விவசாய தொழிலாளர்களை கொண்டு மட்டப்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் சம்பா நடவு பணிகள் மும்முரமாக தொடங்கியுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை