நீடாமங்கலம் வட்டாரத்தில் 16,500 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி: இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு வரும்

நீடாமங்கலம், மே 4: நீடாமங்கலம் வட்டாரத்தில் 16,500 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி பணி நடைபெற்றுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் நெல் அறுவடைக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டாரத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்த அறுவடை முடிந்து தாளடி நடவு செய்த வயல்களில் மின் மோட்டாரை பயன் படுத்தி நிலத்தடி நீரில் சித்தமல்லி, பரப்பனாமேடு, காளாச்சேரி, மேலபூவனூர், ராயபுரம், பெரம்பூர், ரிஷியூர், அனுமந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 16,500 ஏக்கரில் கோடை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

சாகுபடி செய்த வயல்களில் தற்போது களை எடுக்கும் பணி, உரம் தெளிக்கும் பணி, பூச்சி,மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது. முன்கூட்டியே மின் மோட்டாரில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நடவு செய்த வயல்களில் பயிர்கள் வளர்ந்து கதிர்கள் பால் பிடிக்கும் நிலையில் பல்வேறு கிராமங்களில் நெல் கதிர்கள் வளர்ந்து வருகிறது.இந்த நெல் கதிர்கள் இன்னும் 25 அல்லது 30 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை