நீடாமங்கலம் நகரில் மழைநீர் வடிகாலில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம்

நீடாமங்கலம், ஜூலை 30: நீடாமங்கலம் நகரில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகாலில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நாகை-தஞ்சாவூர் வரை கடந்த சில மாதங்களாக தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இந்நிலையில் நீடாமங்கலம் கடை வீதியில் அண்ணா சாலையிலிருந்து பெரியார் சிலை வரையிலான சாலை அமைத்து இரு புறங்களிலும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. பணி நடை பெறும் போதே சில வீடுகளின் கழிவுநீர் மழைநீர் வடிகாலில் கலப்பதால் பணியை விரைவில் முடிப்பதற்கு சில சிக்கல் ஏற்படுகிறது.

இதனால் புதிதாக கட்டப்பட்டுவரும் மழைநீர் வடிகாலில் வீடுகளின் கழிவு நீர் பல நாட்களாக தேங்கி நிற்பதால் நகரில் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மழைநீர் வடிகால் கட்டும் பணி தாமதமாகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நீடாமங்கலம் நகரில் கட்டப்பட்டு வரும் மழை நீர் வடிகாலை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்