நீடாமங்கலம் அருகே பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயிலில் பவுர்ணமி வழிபாடு

நீடாமங்கலம், ஜூன் 23: நீடாமங்கலம் அருகே பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயிலில் பவுர்ணமி வழிபாடு நடைபெற்றது. நீடாமங்கலம் அருகில் உள்ள பூவனூர் கிராமத்தில் சிறப்பு பெற்ற சதுரங்க வல்லபநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் மாலை பவுர்ணமியை முன்னிட்டு சதுரங்க வல்லபநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

தொடர்ந்து அங்கு தனி சன்னதியில் வடக்கு பார்த்து காட்சியளித்து வரும் சாமுண்டீஸ்வரி அம்மன் எதிரே உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோயில் சன்னதிகளில் உள்ள ராஜராஜேஸ்வரி, கற்பகவல்லி சமேத சதுரங்க வல்லபநாதர், சாமுண்டிஸ்வரி அம்மன் சன்னதிகளில் அலங்காரம் செய்யப்பட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு அர்ச்சனை செய்து நெய் விளக்கு ஏற்றினர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்