நிழற்குடை இல்லாததால் பயணிகள் பாதிப்பு

 

ஊட்டி, ஜூலை 6: ஊட்டியில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்வதற்காக, மத்திய பஸ் நிலையத்தின் அருகே ஒரு திறந்தவெளி பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கேர்ன்ஹில், இத்தலார், நஞ்சநாடு ஆகிய கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள், மினி பஸ்கள் அனைத்தும் இங்கு நிறுத்தப்படுகின்றன. இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமருவதற்கு இருக்கையோ அல்லது நிழற்குடைகளோ இல்லாமல் இருந்தது. இந்நிலையில், அப்பகுதியில் ஒரு சிறிய நிழற்குடை அமைக்கப்பட்டது.

இதனால், மழைக்காலங்களில் கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயம் பள்ளி நேரங்கள் மற்றும் மாலை நேரங்களில் இந்த நிழற்குடை போதுமானதாக இல்லை. மேலும், இந்த பஸ் நிறுத்தம் திறந்த வெளியில் உள்ளதால், நிழற்குடையில் நிற்பவர்கள் பஸ்சில் ஏறுவதற்குள் மழையில் சிக்கிக் கொள்கின்றனர்.

எனவே, இங்கு நிறுத்தப்படும் பஸ்களை எதிர் புறம் பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் பஸ்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அங்கு மேற்கூரை அமைத்து பயணிகள் பாதுகாப்பாக பஸ்களில் ஏறிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது போக்குவரத்து கழகத்தின் மூலமாகவோ கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் இந்த பஸ் நிறுத்தத்தில், பஸ்கள் நிற்கும் இடத்தில் கூரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்: 5 பேர் மீது வழக்கு

சவுக்கை செடிகளை பிடுங்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு

கணவன் மாயம்: மனைவி புகார்