நில அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர் உள்பட 2 பேர் சிக்கினர்

வாலாஜாபாத்:  வாலாஜாபாத் தாலுகா வேடல் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (45). இவருக்கு சொந்தமான புஞ்சை நிலத்தை, நில அளவை செய்ய வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு  விண்ணப்பித்தார். ஆனால், கொரோனாவை  காரணம் காட்டி, ஒரு ஆண்டாக  நில அளவை செய்யயாமல் அதிகாரிகள் தவிர்த்து வந்தனர். இதனால் சரவணன் பலமுறை வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில், சர்வேயர் இந்துமதியை (35) சந்தித்து பேசியுள்ளார். அவர், பல்வேறு காரணங்களை கூறி தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சரவணன், வட்டாட்சியர் அலுவலகம் சென்று இந்துமதியை சந்தித்தார். அப்போது இந்துமதி, நில அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். மேலும், அந்த பணத்தை தனது உதவியாளர் சுதன் (26) என்பவரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் அளிக்க விரும்பாத சரவணன், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.இந்நிலையில், நேற்று மாலை சரவணன், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தல்படி, ரசாயனம் தடவிய பணத்தை எடுத்து கொண்டு, வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகம் சென்றார். அங்கிருந்த உதவியாளர் சுதனை சந்தித்து அந்த பணத்தை கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சுதன் மற்றும் இந்துமதியை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை கைது ெசய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

Related posts

ரயிலில் குட்கா கடத்திய 13 பேர் கைது

அதிமுக ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்: 24 பேர் மீது வழக்கு

காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு: 3 பேர் கைது