நிலைய நுழைவு, வெளியேறும் பகுதியில் ஒருங்கிணைந்த நிலப்பரப்பு மேம்பாட்டுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

சென்னை, ஆக. 1: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஒருங்கிணைந்த நிலப்பரப்புகளின் மேம்பாட்டுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ.57 லட்சத்துக்கு கையெழுத்தானது என்று சென்னை மெட்ரோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3 மற்றும் 5ல் அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலைய நுழைவு, வெளியேறும் பகுதிகளில் ஒருங்கிணைந்த நிலப் பரப்புகளின் மேம்பாட்டுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் SREI Infrastructure Finance நிறுவனத்திற்கு ரூ.57 லட்சம் மதிப்பில் கையெழுத்தாகி உள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் நிறுவனத்திற்கு ஜூன் 18ம் தேதி வழங்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் மற்றும் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மற்றும் நிறுவனத்தின் சார்பாக சுதீப்தா மித்ரா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணச்சீட்டு வருவாயுடன் கூடுதல் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.

பல மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக இடங்களை உருவாக்கி வளர்ச்சிக்கு சாத்தியக்கூறுள்ள பகுதிகளை கண்டறிந்துள்ளது. மாதவரம் பால்பண்ணை, வேணுகோபால் நகர், சாஸ்திரி நகர், ஸ்ரீனிவாச நகர் அயனாவரம், ஓட்டேரி, பெரம்பூர் பேரக்ஸ், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, ஆர்.கே. சாலை, திருமயிலை மற்றும் அடையாறு பேருந்து பணிமனை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்காக எடுக்கப்பட்ட இடங்களில் வணிக வளர்ச்சி மேம்பாட்டுக்கான ஒப்பந்தம் நேற்று வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மாற்று வருவாயை அதிகரிப்பதற்காக இதுபோன்ற பல விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து