நிறம் மாறும் பவளம்!

கடலின் அடியாழத்தில் இருக்கும் பவளப் பாறைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். படங்களில்கூட பார்த்திருப்போம். கால நிலை மாற்றத்தின் காரணமாக சமீபமாக இந்தப் பவளைப் பாறைகள் நிறம்  வெளுத்து வருகின்றன என்று சொல்கிறார்கள் சூழலியலாளர்கள். பவளப் பாறைகள் என்ற அமைப்பு பவள உயிரிகளால் ஆனது. நாம் வெளியே காண்பது பவள உயிரிகளின் மேற்கூடு. இந்த ஒவ்வொரு பவளப் பாறைக்குள்ளும் ஆயிரக்கணக்கான நுண்ணியிரிகள் வசிக்கின்றன. இப்படிப் பல பவளப் பாறைகள் சேர்ந்து பவளத்திட்டுகள் உருவாகின்றன. ஒவ்வொரு பவள நுண்ணியிரியும்  சூசாந்தலே என்ற ஒருவகை நுண்பாசியுடன் கூட்டுவாழ்க்கை வாழ்கிறது. இந்த நுண்பாசிகள் தாவரவகை என்பதால் இவை ஒளிச்சேர்க்கை மூலம் உணவைத் தயாரிக்கின்றன. இந்த நுண்பாசிகளே பவள  உயிரிகளின் அடிப்படை உணவு. சுற்றியுள்ள கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கும்போதும் கடல் நீரின் வேதிநிலை மாறும்போதும் கிருமிகள் தாக்கும் போதும் இந்த பவள உயிரிகள் நுண்பாசிகளைத்  துப்பிவிடுகின்றன. இதனால் இவை நிறம் வெளுத்துப் போகின்றன. இதை கோரல் ப்ளீச்சிங் என்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்தடுப்புப் பவளத்திட்டுதான் உலகிலேயே மிகப் பெரியது. மூன்று  லட்சத்து நாற்பதாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இதனை விண்வெளியில் இருந்தாலும் காண முடியும். இந்த வருடம் இதில் ஏற்பட்ட நிறம் இழப்பு மாற்றம்தான் மிகப் பெரிய  அதிவலைகளை ஏற்பத்தியிருக்கிறது. இப்படியே தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் இந்தப் பவளப் பாறைகள் பவளப் பாசிகளாக உருமாற்றம் பெற்று கடலின் வெப்பநிலை உயர்ந்துவிடும் என்று கவலை  தெரிவித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். எதிர்வரும் 2050ல் இந்த பவளத்திட்டுகளில் தொன்னூறு சதவீதம் அழிய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்….

Related posts

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள்: ஐபிசி, பிஎன்எஸ் சட்டமாக மாறியது? சாதக, பாதகங்கள் என்ன? சட்ட வல்லுநர்கள் கருத்து

தயாரிப்பு முறையில் பல்வேறு குளறுபடிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் உணவாக மாறுகிறதா பானிபூரி..?

வெறும் சங்கமாக பதிவு செய்யப்பட்ட என்டிஏ தேர்வு நடத்துவது அரசா, தனியாரா? முறைகேட்டிற்கு பொறுப்பேற்காமல் தப்ப திட்டமா? நீட் விவகாரத்தில் மற்றொரு மாபெரும் மோசடி அம்பலம்