Sunday, October 6, 2024
Home » நிர்வாக வசதிக்காக 12 பிடிஓ.,க்கள் இடமாற்றம்

நிர்வாக வசதிக்காக 12 பிடிஓ.,க்கள் இடமாற்றம்

by Suresh

தர்மபுரி, ஜூலை 8: தர்மபுரி மாவட்டத்தில் 12 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(பிடிஓ) நிர்வாக வசதிக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில், நிர்வாக நலன் கருதி பதவி உயர்வு, பணியிட மாறுதல், கூடுதல் பொறுப்பு மற்றும் பணி நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. தர்மபுரி கலெக்டர் அலுவலக வளர்ச்சி பிரிவு (கணக்குகள்) துணை பிடிஓ அபுல்கலாம் ஆசாத், அரூர் பிடிஓவாக (வ.ஊ) பதவி உயர்வில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரூர் பிடிஓ (வ.ஊ) கலைச்செல்வி, கடத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஏரியூர் பிடிஓ (கி.ஊ) கிருஷ்ணன், பாப்பிரெட்டிப்பட்டிக்கும், பாப்பிரெட்டிப்பட்டி பிடிஓ (கி.ஊ) கலைவாணி, தர்மபுரி பிடிஓவாகவும் (வ.ஊ), தர்மபுரி பிடிஓ சத்யா(வ.ஊ), தர்மபுரி (கி.ஊ) பிடிஓவாகவும், தர்மபுரி பிடிஓ (கி.ஊ) ரங்கநாதன், தர்மபுரி ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பிடிஓ மற்றும் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில், பிடிஓ மற்றும் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ரேணுகா, பாலக்கோடு பிடிஓவாகவும் (கி.ஊ), ஏரியூர் பிடிஓ (வ.ஊ) வடிவேலன், மொரப்பூர் பிடிஓவாகவும் (கி.ஊ), மொரப்பூர் பிடிஓ (கி.ஊ) ஷகிலா, பென்னாகரம் பிடிஓவாகவும் (கி.ஊ), பென்னாகரம் பிடிஓ (கி.ஊ) கணேசன், காரிமங்கலம் பிடிஓவாகவும் (வ.ஊ), காரிமங்கலம் பிடிஓ (வ.ஊ) சர்வோத்தமன், நல்லம்பள்ளி பிடிஓவாகவும் (கி.ஊ), நல்லம்பள்ளி பிடிஓ (கி.ஊ) கல்பனா, ஏரியூர் பிடிஓவாக (வ.ஊ) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட அலுவலர்கள், புதிய பணியிடத்தில் உடனே சேர வேண்டுமென கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi