நிபுணர்கள் கூட்டத்துக்கு அரசு அவசர அழைப்பு

புதுடெல்லி: குரங்கம்மை தொற்று அதிகரித்து வருவதால் தற்போதுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்வதற்காக ஒன்றிய அரசு நிபுணர்கள் குழுவின் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது. வெளிநாடுகளில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள குரங்கம்மையால், இந்தியாவில் பாதிப்போர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தற்போது இந்த பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்த கேரள வாலிபர் உயிரிழந்துள்ளார். குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதை கட்டுப்படுத்துவதற்காக தற்போதுள்ள வழிகாட்டு விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இது பற்றி ஆலோசிப்பதற்காக சுகாதாரத் துறையை சேர்ந்த நிபுணர்களின் அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் அவசர மருத்துவ நிவாரண இயக்குனர் சுவஸ்திசரண் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு, தேசிய நோய் கட்டுப்பாடு மையம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். * ஒன்றிய அரசு ஏற்கனவே அறிவித்துள்ள வழிகாட்டு விதிமுறையில், ‘குரங்கம்மை பரவியுள்ள நாடுகளுக்கு, 21 நாட்களுக்குள் சென்று வந்த நபர்களுக்கு சொறி, வீக்கம், காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்களை நோய் பாதித்தவர்களாக கருதி தனிமைப்படுத்த வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது….

Related posts

கொல்கத்தாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு!