நினைவுக்குறைவு நோயால் பாதித்த சிறுமியை மருத்துவமனையில் சந்தித்தார் மம்முட்டி

திருவனந்தபுரம்: நினைவுக்குறைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியை, மருத்துவமனையில் சந்தித்துப் பேசினார் நடிகர் மம்முட்டி. கேரளா மாநிலம் கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், முதியவர்கள் சிலருக்கு ஏற்படும் நினைவுக்குறைவு நோயால் சிறுமி ஆராதிகா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு, தனக்கு மிகவும் பிடித்த நடிகர் மம்முட்டியை நேரில் சந்திக்க விரும்பியுள்ளார். இதுகுறித்து சிறுமி வெளியிட்ட வீடியோவில், ‘மம்முட்டி அங்கிள். எனது பிறந்தநாளுக்கு எனக்கு வாழ்த்து சொல்ல நேரில் வருவீர்களா?’ என்று கேட்டிருந்தார். சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோ மம்முட்டியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே மம்முட்டி அந்த சிறுமியை மருத்துவமனைக்கு சென்று சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தற்போது அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது….

Related posts

காஷ்மீரில் 2 இடங்களில் மோதல்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: போலீஸ் ஏட்டு பலி; 6 வீரர்கள் காயம்

டாக்டர்கள் மீது தாக்குதல் எதிரொலி; ஜூனியர் மருத்துவர்கள் மீண்டும் பணி நிறுத்தம்

அக்டோபர் 2ம் தேதி நடக்க உள்ள சிறப்பு கிராம சபைகளில் 20,000 மாணவர் பங்கேற்பு