நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியீடு: ஊராட்சி தலைவர் புது முயற்சி

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் சிறுதாவூர் ஊராட்சி தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வேதா அரு. தேர்தலின் போது கிராமசபை கூட்டங்களில் ஊராட்சி வரவு, செலவு குறித்த தகவல்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடுவேன் என உறுதியளித்தார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசு தின விழா ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. அப்போது, தேசிய கொடியை ஏற்றி வைத்த ஊராட்சி மன்ற தலைவர் வேதா அருள், சிறுதாவூர் ஊராட்சியில் பொறுப்பேற்கும்போது இருந்த நிலுவைத் தொகை, அதன் பிறகு பல்வேறு திட்டங்களின் கீழ் அரசிடம் இருந்து வரப்பெற்ற தொகை உள்பட அனைத்தையும் துண்டு பிரசுரமாக வெளியிட்டு பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும், ஊராட்சி பணிகள் தொடர்பான சந்தேகங்கள் குறித்து ஊராட்சி அலுவலகத்தில் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றார்….

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு