நாவல் பழம் விலை சரிவு

போச்சம்பள்ளி, ஜூலை 3: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாட்டு நாவல் மரங்கள் அதிகளவில் இருந்தது. இதில், கிடைக்கும் பழங்களை சேகரித்து சென்று நகரப்பகுதியில் விற்பனை செய்வது வழக்கம். நகரமயமாக்கல் காரணமாக நாவல் மரங்கள் வெட்டப்பட்டதால், பழங்களை காண முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் விளையும் ஜம்பு நாவல் பழத்தை வாங்கி வந்து, கிலோ ₹400 முதல் விற்பனை செய்தனர். தற்போது நாவல் வரத்து அதிகரித்துள்ளால், விலை சரிந்துள்ளது. ஒரு கிலோ ₹200 வரையிலும் குறைந்துள்ளது. முன்பு கால்கிலோ வாங்கிச் சென்றவர்கள், தற்போது, கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை