நாவல்காடு கண்டன்சாஸ்தா கோயில் கும்பாபிஷேகம்

 

நாகர்கோவில், ஆக. 26: தமிழக முதல்வர் சட்டமன்ற அறிவிப்பின்படி நாவல்காடு இலுப்பாவுடைய கண்டன் சாஸ்தா கோயிலில், திருக்கோயில் நிதி ரூ.12 லட்சமும், உபயதாரர் மூலம் ரூ.8 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்தன. பணிகள் முடிந்து நேற்று முன் தினம் காலை குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழுத்தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜேஷ், மராமத்து பொறியாளர் ராஜ்குமார், சூப்பிரண்டு சுப்பிரமணியம், ஸ்ரீகாரியம் சண்முகம் பிள்ளை, கவுன்சிலர் ராஜேஸ்வரி வள்ளலார் பேரவை மாநில தலைவர் பத்மேந்திரா உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்