நாளை மறுதினம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; குமரி முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்: கடலோர பகுதிகளில் சிறப்பு ரோந்து படைகள் கண்காணிப்பு

நாகர்கோவில்: கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குமரி மாவட்டத்திலும் கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மாவட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இயேசு கிறிஸ்து பிறப்பு கிறிஸ்துமஸ் பண்டிகையாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம்தேதி ெகாண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நாளை மறுதினம் (25ம்தேதி) நடக்கிறது. குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்.கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா உச்ச கட்டத்தில் இருந்ததால், எளிமையான முறையில் கொண்டாட்டங்கள் நடந்தன. இந்த ஆண்டு மிகவும் உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை ெகாண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த 15 நாட்களாகவே குமரி மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளன. தேவாலயங்கள் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரமாண்ட குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீடுகளிலும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுப்படுத்தும் வகையில்  குடில்கள், ஸ்டார்கள் அமைத்துள்ளனர். அவற்றை மின் விளக்குகளாலும் அலங்கரித்துள்ளனர். நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல், அருமனை, களியக்காவிளை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டி உள்ளன. நித்திரவிளை, தேங்காப்பட்டணம், புதுக்கடை, கொல்லங்கோடு, கருங்கல் உள்ளிட்ட கடலோர பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உற்சாகத்துடன் நடந்து வருகிறது. வீதிகள் தோறும் கேரல் நிகழ்ச்சிகளும், கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலமும் நடைபெற்று வருகிறது. பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தேவாலயங்களும் மின்னொளியின் ஜொலிக்கின்றன. கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பேக்கரி கடைகளில் வித, விதமான கேக் வகைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. பட்டர் பிளம் கேக், ரெயின் போ கேக், ஸ்ட்ராபெர்ரி, பிளாக் பாரஸ்ட் உள்பட 60க்கும் மேற்பட்ட வகையிலான கேக் வகைகள் விற்பனைக்கு உள்ளன. தற்போது கேக் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. வெளிநாடுகளுக்கும் அனுப்ப ஆர்டர் வருவதாக பேக்கரி உரிமையாளர்கள் கூறினர். குமரி மாவட்டத்தில் உள்ளவர்கள் வெளிநாடுகளில் அதிகம் உள்ளனர். இவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக ெசாந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். கிறிஸ்துமசையொட்டி குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடலோர பகுதிகளில் சிறப்பு ரோந்து படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கிறிஸ்துமசையொட்டி குமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை ஆகும்….

Related posts

மெரினா கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கிய 2 சிறுவர்கள் உயிருடன் மீட்பு: மெரினா மீட்பு குழுவுக்கு பாராட்டு

சுற்றுச்சூழல் அறிவியலுக்கான செமஸ்டர் தேர்வு 31-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்

ஆவணங்களின்றி கொண்டு வந்த ₹10 லட்சம் பறிமுதல்: ஹவாலா பணமா? போலீஸ் விசாரணை