நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு

சேலம், அக்.1: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாளை சேலம் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (2ம் தேதி) புதன்கிழமையன்று, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்zமாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இதனை மீறி மதுபான விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி