நாளை, நாளை மறுதினம் நடக்கிறது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி

திருவாரூர், ஆக. 7: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுபோட்டிகள் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றால் ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மாகாந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தைபெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு,பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்ற அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. தற்போது 2023-24ம் நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நாளையும் (8ம் தேதி), முத்தமிழறிஞர் கலைஞர் 100வது பிறந்தநாள் ஆண்டையொட்டி நாளை மறுதினமும் (9ம் தேதி) திருவாரூர் மாவட்டத்தில் உள்ளஅனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது.

பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை தஞ்சை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநரும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் தெரிவுசெய்து போட்டிக்கு அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் போட்டிக்கான தலைப்புகள் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும், பள்ளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்விஅலுவலர் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.
மேலும் திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள இநத பேச்சுபோட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்டஅளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.3 ஆயிரமம், 3ம் பரிசாக ரூ.2 ஆயிரம்- வழங்கப்படஉள்ளது.

இது தவிர போட்டியில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்களில் சிறந்த 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். எனவே இந்த போட்டியில் மாணவர்கள் பங்கேற்றும் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை