நாளை சர்வதேச மகளிர் தினம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் வாழ்த்து

சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக மகளிர் தின வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர். ‘‘கடவுள் கோவிலில் சிலைகளாகவும், குடும்பத்தில் பெண்களாகவும் இருக்கிறாள்’’ என்றால் அதை மறுப்போர் யாரும் இருக்க முடியுமா? அன்பு அன்னையாய், ஆருயிர் மனைவியாய், அருமை மகளாய் எத்தனை வடிவில் தோன்றினாலும் பெண் என்பவள் தெய்வம் தான் என அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்து செய்தி அனுப்பியுள்ளனர். ஒவ்வொரு நிமிடமும் உழைத்துக் கொண்டிருக்கும் பெண், தன் பணிகளில் எதையேனும் இனி செய்வதில்லை என்றோ அல்லது சிறிது காலம் ஒத்திவைப்பது என்றோ முடிவெடுத்தால் இந்த உலகம் எப்படி இயங்கும் என்பதை சிந்தித்துப் பார்த்தாலே, பெண் தான் உலகை இயக்கும் அன்னை மகா சக்தி என்பது விளங்கும். பெண்மையைப் போற்றி வணங்கவும், பெண் இன்றி உலகம் இல்லை என்பதை உணர்த்தவும், பெண்ணின் தியாக வாழ்வுக்கு வணக்கம் செலுத்தவும், ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ம் தேதி “சர்வதேச மகளிர் தினமாக’’ கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தையொட்டி நாளை கட்சி தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி தலைமையில் கேக் வெட்டப்படுகிறது. மேலும் விதவைகளுக்கு தையல் எந்திரம், பழ வியாபாரம் செய்வதற்கு நிதி உதவி, மதிய உணவு 1,500 பேருக்கு வழங்கப்படுகிறது. இந்த விழாவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்….

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை