நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சேலம்: சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியும், சென்னையில் உள்ள வெர்ச்சுசா மென்பொருள் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. நிகழ்ச்சிக்கு நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளை செயலாளர் குமாரசாமி தலைமை தாங்கினார். வெர்ச்சுசாவின் சீனியர் வைஸ் பிரசிடெண்ட் நாராயணன் மற்றும் வெர்ச்சுசாவின் குலோபல் ஹெட் (கேம்பஸ் ஸ்ட்ராடஜி அண்ட் எங்கேஜ்மென்ட்) கிரித்திவாசன் ஆகியோர், வெர்ச்சுசாவின் ஃபுல்-ஸ்டாக் டாட்-நெட்  ஆய்வகத்தை, கல்லூரி வளாகத்தில் துவக்கி வைத்து பேசினர். கல்லூரி நிறுவனர் மற்றும் முதல்வர் சீனிவாசன், வெர்ச்சுசா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து பேசினார். இதில் வெர்ச்சுசாவின் மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலர்கள் கீதாஞ்சலி சோனி மற்றும் செல்சியா ஷெரின் ஆகியோர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு துறை இயக்குனர் ராஜேந்திரன், துணை முதல்வர் விசாகவேல், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள் பங்கேற்றனர். கல்லூரி அறக்கட்டளை தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை