நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 30 காசு குறைந்தது

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 30 காசு குறைந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஒரு வாரமாக முட்டை விலை 550 காசாக இருந்தது. இந்நிலையில், நேற்று நாமக்கல் மண்டல என்இசிசி சேர்மன் டாக்டர் செல்வராஜ், முட்டை விலையில் 30 காசுகள் குறைத்து, ஒரு முட்டையின் விலை 520 காசாக நிர்ணயம் செய்துள்ளார். பண்ணை கொள்முதல் விலை 550 காசாக இருந்ததால், சில்லறை விற்பனை விலை கடைகளில் ரூ.6 வரை உயர்ந்தது. இதனால் முட்டை விற்பனை தமிழகம் முழுவதும் குறைய தொடங்கியது. இதை சரிக்கட்டும் வகையில், தற்போது முட்டையின் கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளது….

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்