நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேரில் ஆஜர்

நாமக்கல்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த இன்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் மீது, நாமக்கல் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கு, நேற்று நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசார் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விஸ்வநாதன், வழக்கு விசாரணையை வரும் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதையடுத்து, யுவராஜ் போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை