நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மதிப்பீட்டு போட்டித் தேர்வு

 

நாமக்கல், செப். 11: தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவு மூலம், மாதம் ₹7500 ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டு போட்டித்தேர்வு, தேசிய குடிமைப்பணி தேர்விற்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்காக அறிவிக்கப்பட்டு உள்ளது.அடுத்த ஆண்டு மே 26-ந் தேதி நடைபெறும் மத்திய அரசின் முதல் நிலை குடிமைப்பணி தேர்வில் பங்கேற்க உள்ள விண்ணப்பதாரர்கள், முன்னோடி மதிப்பீட்டு தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களில் 1,000 மாணவர்களுக்கு ₹7,500 ஊக்கத்தொகையாக 10 மாதங்களுக்கு குடிமைப்பணிகள் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக வழங்கப்படும்.

இதற்கான மதிப்பீட்டு தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில் டிரினிடி கல்வி நிறுவனம், ஜெய் ஆஞ்சநேயா மெட்ரிக் பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத 787 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 287 பேர் நேற்று தேர்வு எழுத வரவில்லை. 500 பேர் தேர்வு எழுதினர். நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, தேர்வு மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை