நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை குறைவு வீல் அலாய்மென்ட் நிலையங்கள் வெறிச்சோடியது

புதுக்கோட்டை : தமிழகத்தில் வாகனங்களின் விற்பனை குறைவாகல் நகரங்களில் தொடங்கப்பட்ட கனிப்பொறி வசதியுடன் கூடிய வீல் அலாய்மென்ட் மற்றும் டயர்கள் விற்பனை நிலையத்திற்கு போதிய கார்கள் வராததால் வெறிச்சோடி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளுக்கு ஒரு கிராமத்ததில் ஆயிரம் வீடுகளில் 20 வீடுகளில் தான் இரு சக்கர வாகனம் இருக்கும். இதபோல் நகர் பகுதியில் குறைந்து அளவு தான் இருசக்கர வாகனம் இருக்கும். கிராமத்தில் ஒரு சில வீடுகளில் தான் நான்கு சக்கர வாகனம் இருக்கும். தற்போது இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்ளின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வண்ணம் இருந்தது. இந்த வாகனங்களுக்கு தேவையான டயர்கள் வாங்க வேண்டுமெனில் பெரு நகரங்களுக்கு தான் செல்ல வேண்டும். குறிப்பாக நான்கு சக்கர வாகனங்ளுக்கு டயர் மாற்ற வேண்டுமானால் திருச்சி, மதுரை போன்ற பெரு நகரங்ளுக்குதான் போக வேண்டும். ஏனென்றால் அங்குதான் கணிப்பொறி உதவியுடன் வீல் அலாய்மென்ட் பார்க்க முடியும். இதேபோல் பல்வேறு வகையான கம்பெனிகளின் டயர்களை வாங்க இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர்கள் பெரு நகரங்களை நோக்கி வருவார்கள். இதனால் அவர்களுக்கு அதிக அலைச்சல், வீண் செலவு அதிகரித்து வந்தது.மேலும் காலையில் சென்றால் மாலை ஆகிவிடும். இடைபட்ட நேரம் அந்த இடத்திலேய முடங்கி கிடக்க வேண்டும். இந்நிலையில் தற்போது டயர் விற்பனை சிறு நகரங்களுக்கு வந்துள்ளது. குறிப்பாக நான்கு சக்கர வாகனங்களுக்கு தேவையான அனைத்து வித முன்னணி நிறுவனங்களின் டயர்கள் கிடைக்கிறது. மேலும் டயர்கள் மாற்றும்போது வீல் அலாய்மென்ட் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இதற்கு கணிப்பொறி வசதியுடன் அலாய்மென்ட் கருவி இருக்க வேண்டும்.இந்த வசிகள் அனைத்தும் கொண்ட கடைகள் தற்போது பேரூராட்சி அளவில் உள்ள சிறிய நகரங்களுக்கு வந்துவிட்டது. இதனால் வாகனம் வைத்திருப்போர்கள் பெருநகரங்களை நோக்கி செல்வதை தவிர்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா காலம் என்பதாலும் உற்பத்தி குறைந்து நிறுவனங்கள் மூடப்பட்டதாலும் ஆட்டோ மொபைல் தொழிலில் ஏற்பட்டுள்ள மந்தத்தின் காரணாக விற்பனை குறைந்துவிட்டது. வட்டிவிகிதம் அதிகரிப்பு, கடன் பெறுவதில் சிக்கல் உள்ளிட்ட பல பிரச்னைகளால் கார் வாங்குவோர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் சிறு நகரங்களில் தொடங்கிய கணிப்பொறியுடன் கூடிய வீல் அலைமென்ட் செய்யும் கடைகளுக்கு வாகனங்கள் வருவது கடந்த சில வாரங்களாக வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் புதிதாக தொடங்கிய சில நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் வருமால் வெறுச்சோடி கணப்படுகிறது. பல ஆண்டுகளாக கடை வைத்திருப்பவர்களுக்கு தொடர்ந்து பழைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர். அங்கேயும் கடந்த சில மாதங்ளாக வாகனங்கள் வருகை குறைந்து வருமானமும் குறைந்து வருவாக தெரிவிக்கின்றனர்….

Related posts

மதுரையில் 11,500 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி உரை

திரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்.

கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்