நாட்றம்பள்ளி அருகே கிணற்றில் விழுந்த கரடி 24 மணி நேரத்திற்கு பின்வெளியேறியது

நாட்றம்பள்ளி: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சி செட்டேரி டேம் உள்ளது. இந்த டேம் அருகே உள்ள வீராகவுண்டனூரில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 வயது கரடி ஊருக்குள் வந்தது. அப்போது 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் நாட்றம்பள்ளி தீயணைப்பு துறை மற்றும் திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினரும், திருப்பத்தூர் வனத்துறையினரும் கரடியை மீட்க ஏணியை கிணற்றில் இறக்கி அது மேலே ஏறி வரும் வரை காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் கரடி மேலே ஏறி வரவில்லை. இதற்கிடையே பொதுமக்கள், தீயணைப்புத்துறையினர் அருகில் வீட்டில் இருந்த கயிற்றுக்கட்டிலை கிணற்றில் இறக்கிவிட்டனர். ஆனாலும் கரடியை மீட்க முடியவில்லை. இதையடுத்து ஏணியை மட்டும் கிணற்றில் விட்டுவிட்டு தீயணைப்புத்துறையினர் சென்றுவிட்டனர். இரவு முழுவதும் வனத்துறையினர் காத்திருந்தும் கரடி மேலே ஏறி வரவில்லை. இந்நிலையில் அதிகாலை 4 மணியளவில் தீயணைப்பு துறையினரின் ஏணி வழியாக கரடி தட்டுத்தடுமாறி ஏறி கிணற்றில் இருந்து வெளியே வந்தது. பின்னர் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில் இருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்ற கரடி மீண்டும் ஊருக்குள் புகுந்துவிடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உளளனர். …

Related posts

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை

திருவனந்தபுரத்தில் மேலும் 2 பேருக்கு அமீபா காய்ச்சல்

₹17,500 இல்லாததால் இடம் மறுப்பு; தலித் மாணவனுக்கு தன்பாத் ஐஐடியில் சீட்: உச்ச நீதிமன்றம் அதிரடி