நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க விழா

 

சேந்தமங்கலம், பிப்.2: சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரியில், நாட்டு நலப்பணி திட்டம் முகாம் தொடக்க விழா நடைபெற்றது. சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரியில், நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க விழா, கல்லூரி முதல்வர் பாரதி தலைமையில் நடந்தது. ஒன்றிய குழு துணை தலைவர் கீதா வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் ரவி வரவேற்றார். இதில் வட்டார அட்மா குழு தலைவர் அசோக்குமார் கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்து பேசினார். பின்னர், உள் விளையாட்டு அரங்கத்தில் பூப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், உத்திரகிடி காவல் ஊராட்சி மன்ற தலைவர் கொண்டுசாமி, பிடிஏ உறுப்பினர் நந்தகுமார், கல்லூரி துறை தலைவர்கள் செந்தில்குமரன், கலையரசி, சத்யராஜ், சக்கரவர்த்தி, ராஜசேகர், ராமநாதன் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திலீப், பிரபு, பிரியங்கா தலைமையில் மாணவ,மாணவிகள் வெட்டுக்காடு மலை, வேப்பன்குட்டை கிராமங்களில் உள்ள அரசு பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், கோயில் பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

 

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை