நாட்டிலேயே சூரிய மின் உற்பத்தியில் கர்நாடகா முதலிடம்

பெங்களூரு: நாட்டிலேயே அதிகபடியாக கர்நாடகாவில் 7,346 மெகாவாட் மின்சாரம் சூரிய ஆற்றல் மூலம் பெறப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மிகப்பெரிய சூரிய மின்உற்பத்தி துமகூருவில் உள்ள பாவகடாவில் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நாட்டில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், கர்நாடகா சூரிய கதிர்மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகாவுக்குப் பிறகு, தமிழகத்தில், 4,403 மெகாவாட் மின்சாரம் சூரிய மின்சக்தி மூலம் பெறப்படுகிறது. தொடர்ந்து குஜராத்தில் 4,068 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு மூன்றாவது இடத்தில் உள்ளது. கர்நாடக பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தரவுகளின்படி, கலபுர்கியின் பிரோசாபாத்தில் ஒரு சூரிய பூங்கா அமைப்பதன் மூலம் இதை மேலும் விரிவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த பூங்கா 500 மெகாவாட் திறன் கொண்டதாக இருக்கும். பசுமை ஆற்றல் மாநிலத்தின் அன்றாட மின் தேவைகளில் குறைந்தது 45 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. ‘‘சூரிய மற்றும் காற்றாலைக்கு ஒரு பெரிய பங்களிப்பு உள்ளது,” தொடர்ந்து இந்த திட்டம் வணிக ரீதியாக மாறியுள்ளதால் கூரை சூரிய மின் உற்பத்தியில் கவனம் செலுத்துவதை குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 28ம் தேதி வரை, கர்நாடகா 100 மெகாவாட் மின்சாரம் பெறும் வகையில் கூரை சூரிய மின்சக்தியை நிறுவியிருந்தது. கர்நாடகா இப்போது காற்றாலை ஆற்றல் வாய்ப்புகளில் அதிக கவனம் செலுத்துகிறது. வடக்கு கர்நாடகாவில் மூன்று இடங்களை காற்றாலை ஆற்றல் திட்டங்களுக்காக அரசு அடையாளம் கண்டுள்ளது என்று எரிசக்தியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்….

Related posts

தேர்வு எழுதும் மாணவர்களுடனான மோடியின் கலந்துரையாடல் மெய்நிகர் நிகழ்ச்சியாகிறது: நீட் விவகாரத்தால் மாற்றம்

மாநில கட்சிகளை அழிக்கும் பாஜதான் ஒரு ஒட்டுண்ணி: மோடிக்கு காங்கிரஸ் பதிலடி

புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு புத்தகம் தயாரிப்பு பணி இன்னும் முடியவில்லை: கல்வி அமைச்சகம் தகவல்