நாட்டின் வளர்ச்சிக்கான நல்ல திட்டம்; 8 வழிச்சாலை திட்டத்தை அதிமுக எப்போதும் ஆதரிக்கிறது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம்: சேலம்-சென்னை 8 வழிச்சாலை நாட்டின் வளர்சிக்கான நல்லதிட்டம் என்பதால் ஆதரித்தோம். இதை தவிர்த்து அந்த திட்டத்தை ஆதரிக்க எனக்கு சேலத்தில் 10 பேக்டரியா இருக்கிறது?  என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். சேலத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று அளித்த பேட்டி: அரசின் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் சொத்துவரியை உயர்த்தி இருப்பது ஏற்புடையதல்ல. சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை எப்போதும் அதிமுக ஆதரிக்கிறது. இது நாட்டின் வளர்ச்சிக்கான நல்ல திட்டம் என்பதால் மட்டுமே ஆதரித்தோம். இதைவிடுத்து அந்த திட்டத்தை ஆதரிக்க சேலத்தில் எனக்கு 10 பேக்டரியா இருக்கிறது? நாட்டின் வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் அவசியம். இந்த வசதிகள் இருந்தால்தான் தொலைநோக்கு திட்டங்களை எளிதாக செயல்படுத்த முடியும். அப்படி ஒரு வளர்ச்சிக்கான திட்டம் தான் எட்டுவழிச்சாலை திட்டம். இந்த திட்டத்தை செயல்படுத்தும் அரசு, அதற்குரிய நிலத்தை வழங்கும் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை 4 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும். அதாவது ₹5 லட்சம் மதிப்புள்ள நிலத்திற்கு ₹20லட்சம் வழங்க வேண்டும். ஒரு தென்னை மரத்திற்கு ₹30 ஆயிரம் முதல் ₹40 ஆயிரம்வரை வழங்க வேண்டும். இதேபோல் வீடுகள், கால்நடைகள் என்று அனைத்திற்கும் தனித்தனியாக மதிப்பீடு செய்து 4 மடங்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.  இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். …

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு