நாடு முழுவதும் 4 நாள் பத்திரிகையாளர் சந்திப்பு: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: ரயில்வே, விமான நிலையம், நெடுஞ்சாலைகள் மற்றும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை விற்று, அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியை ஒன்றிய அரசு திரட்ட உள்ளது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இத்திட்டத்தை பற்றி நாட்டு மக்களுக்கு எடுத்து கூற, நாடு முழுவதும் நாளை முதல் செப்டம்பர் 3ம் தேதி வரையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தப் போவதாக காங்கிரஸ் நேற்று தெரிவித்தது. இதில், பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்த உள்ளனர். இத்திட்டத்தை பற்றி கடந்த வாரம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  …

Related posts

இறுதி கட்டமாக 40 ெதாகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு; ஜம்மு – காஷ்மீரில் இன்றுடன் தேர்தல் நிறைவு: 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை; ஆட்சியை பிடிப்பது யார்?

பிகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் கிலாஃபத் நகர் பகுதியில் குண்டு வெடிப்பு: 7 சிறுவர்கள் காயம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்: நாளை மறுதினம் விஸ்வக்சேனாதிபதி வீதி உலா