நாடு முழுவதும் 36 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் 15 காசு குறைப்பு: டீசல் விலையும் 18 காசு சரிந்தது

சேலம்: நாடு முழுவதும் 36 நாட்களுக்கு பிறகு நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசு குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு குறைக்கத் துவங்கியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் டீசல் விலையில் கடந்த 18ம் தேதி 19 காசு, 19ம் தேதி 18 காசு, 20ம் தேதி 18 காசு என 3 நாட்களில் 55 காசு குறைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்றும் டீசல் விலை 18 காசு குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாடு முழுவதும் ஜூலை 17க்கு பிறகு நேற்று பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 36 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 15 காசு குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழக அரசு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100க்கும் கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு பெட்ரோல் விலையில் 15 காசு குறைத்துள்ளதால், சென்னையில் நேற்று முன்தினம் ரூ.99.47க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் 15 காசு குறைந்து நேற்று ரூ.99.32க்கு விற்கப்படுகிறது. இதேபோல், டீசல் விலை நேற்று முன்தினம் ரூ.93.84 ஆக இருந்த நிலையில் நேற்று 18 காசு குறைந்து ரூ.93.66க்கு விற்கப்படுகிறது. சேலத்தை பொறுத்தவரை, பெட்ரோல் விலை ரூ.99.64 ஆகவும், டீசல் விலை ரூ.94 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்று பெட்ரோல் டெல்லியில் 20 காசு குறைந்து ரூ.101.64, மும்பையில் 17 காசு குறைந்து ரூ.107.66 எனவும், டீசல் நேற்று டெல்லியில் 20 காசு குறைந்து ரூ.89.07, மும்பையில் 20 காசு குறைந்து ரூ.96.64 எனவும் விற்கப்பட்டது….

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்