நாடு முழுவதும் ஒரே கல்வித் திட்டம்: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், ‘குருகுலம் முறையிலான பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அரசு பணிகளுக்கு செல்லும்போது, இந்த படிப்பை ஒரு தகுதியாக எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. அதே நேரம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்கள், கிறிஸ்தவ அறக்கட்டளைகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. எனவே, இது போன்ற கல்வி நிலையங்களில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வித் திட்டத்தை கொண்டு வர வேண்டும். மேலும், 6 வயது முதல் 10 வயது வரையிலான காலக்கட்டம் குழந்தைகளின் வாழ்வில் மிக முக்கியமான தருணம். இந்த நேரத்தில் இத்தகைய கல்வி முறைகளை போதிப்பது, மத உணர்வுகளை ஏற்படுத்துகிறது,’ என கோரினார்.  நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதி, ‘வேண்டும் என்றால் உயர் நீதிமன்றத்தை மனுதாரர் அணுகி கோரிக்கை வைக்கலாம்,’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்….

Related posts

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!

10 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு மூலம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: பிரதமர் மோடி, ஒன்றிய கல்வி அமைச்சருக்கு காங்கிரஸ் கண்டனம்