நாடு முழுவதும் ஏர்டெல் இணையதள சேவை திடீர் முடக்கம்

புதுடெல்லி: இந்தியா முழுவதும் நேற்று காலை திடீரென ஏர்டெல் இணையதள சேவை முடங்கியது. குறிப்பாக, டிவிட்டரில் உள்ள பல ஏர்டெல் பயனர்கள் தங்கள் மொபைல் டேட்டா மற்றும்  பிராட்பேண்ட் இணைப்பு இரண்டும் வேலை செய்யவில்லை என புகார் கூறினர். பின்னர், சிறிது நேரத்தில் இணையதள சேவை சரி செய்யப்பட்டு, இயங்க தொடங்கியது. இது குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டியில், ‘தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏர்டெல்லின் இணையதள சேவை இன்று (நேற்று) காலை இந்தியா முழுவதும் சிறிது நேரம் இடையூறுகளை எதிர்கொண்டது. சிறிது நேரத்தில் சேவைகள் முழுமையாக சரி செய்யப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்,’ என்று தெரிவித்தார்….

Related posts

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை..!!

அக்.08: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

இந்தியாவில் கார்கள் விற்பனை செப்டம்பர் மாதத்தில் 19 சதவிகிதம் சரிவு