நாடியம்மன் கோயிலில் வெண்ணைத்தாழி திருவிழா கோலாகலம்

பட்டுக்கோட்டை, ஏப்.12: தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் பங்குனி பெருந்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நேற்று மண்டகப்படியிலிருந்து வெண்ணைத்தாழி குடத்துடன் எழுந்தருளி நாடியம்மன் வீதி உலா வந்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் நாடியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பட்டுக்கோட்டை நகராட்சி சார்பிலும், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பிலும், பட்டுக்கோட்டை நகராட்சி சார்பிலும் நாடியம்மனுக்கு பட்டு வழங்கும் வைபவம் வெகு விமரிசையாக நடந்தது.

நகராட்சி அலுவலகத்தில் உள்ள வலம்புரி வெற்றி விநாயகர் ஆலயத்தில் நடந்தது. அதனைத் தொடர்ந்து சுமார் 2,000 பேருக்கு பட்டுக்கோட்டை நகராட்சி விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (12ம் தேதி) மாவிளக்கு திருவிழாவும், 13 மற்றும் 14ம் தேதிகளில் தேரோட்டம் நடைபெறும். 15ம் தேதி முத்துப் பல்லக்கு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்று நாடியம்மன் கோட்டைக்கு எழுந்தருளுவார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி