நாசவேலையில் ஈடுபட திட்டமிட்ட இலங்கை தமிழர்கள் 2 பேர் தேடப்படும் குற்றவாளிகள்: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: நாசவேலையில் ஈடுபட திட்டமிட்ட இலங்கை தமிழர்கள் 2 பேரை தேடப்படும் குற்றவாளிகள் என பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு க்யூ பிரிவு போலீசார் உதயதாஸ், சுரேஷ்குமார், மகேஸ்வரன், அன்புக்குமரன், கிருஷ்ணமூர்த்தி, சிவனேஸ்வரன், மகேஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து வெடி குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தும்  பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு, பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், தொடர்புடைய மகேஸ்வரன், சிவனேஸ்வரன் ஆகியோர் ஜாமீனில் வெளிவந்த போது தலைமறைவாகி விட்டனர். மேலும், வழக்கு விசாரணையின்போது, இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளனர். எனவே, இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் உத்தரவிட்டுள்ளார்….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்