நாங்களும் தான் களத்துல இருக்கோம்..!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புனு தாக்கல் ஒருவழியா முடிஞ்சது. சுயேட்சையா போட்டியிடுபவர்களும், நாங்களும் தான் களத்துல இருக்கோம்னு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கு. இதுக்காக அவங்க வித்தியாசமான யுக்திய கையாண்டு வந்தாங்க. அதன்படி மாங்கனி மாவட்டத்துல, கடைசி நாளான நேற்று அடுத்தடுத்து 3 பேரு வந்து பரபரப்ப உருவாக்கிட்டாங்க. சேலம் வடக்கு தொகுதியில பிஸ்மில்லா மக்கள் கட்சி சார்பா போட்டியிடுறேன்னு சொல்லி, கோட், சூட் போட்ட வக்கீல் ஷாஜகான் என்பவர் 10 அடிநீள பிளக்ஸ் பேனர கொண்டு வந்தாரு. அதாவது, வாக்குப்பதிவு அன்னிக்கு அரசு ஊழியர்கள போலவே தனியார் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கும் சம்பளத்தோட லீவு கொடுங்கனு கேட்ட அவரு, அதற்கான தேர்தல் ஆணைய உத்தரவையும் பிளக்ஸ்ல பிரிண்ட் போட்டுட்டு வந்து பரபரப்ப ஏற்படுத்தினாரு. இவரு போன கொஞ்ச நேரத்துல, பகுஜன் சமாஜ் கட்சி சார்பா வேலன் என்பவர் சைக்கிள்ல ஊர்வலமாக வந்தாரு. எகிறிவரும்  பெட்ரோல், டீசல் விலை உயர்வ கண்டிச்சு இதுமாதிரி சைக்கிள் ஊர்வலம் அவதாரம் எடுத்தாராம். இதேபோல், சேலம் மேற்கு தொகுதியில போட்டியிட தமிழக இளைஞர் கட்சி சார்பில் கார்த்திகேயன் வந்தாரு. பெட்ரோல், டீசல் விலைய கண்டிச்சு, அதையே பாட்டில்ல அடைச்சு மாலையா அணிவிச்சு கொண்டுவந்தாரு. அவரோட வந்தவங்களும், மக்களின் கண்ணீர் நிலை இதுதான்னு, தங்களோட பங்குக்கு, பதாகை எடுத்துட்டு வந்தாங்க….

Related posts

சொல்லிட்டாங்க…

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்